வீதியோர முகாம்களைத் தொடர்ந்து வைக்க அனுமதி
பிரிடிஷ் கொலம்பியாவின் Maple Ridge பகுதியின் வீதியோரத்தில் உள்ள வீடற்றவர்களுக்கான தற்காலிக முகாம்களை மேலும் ஒன்பது மாதங்களுக்கு அங்கு தொடர்ந்து வைப்பதற்கு அந்நகர நிர்வாகிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.
Maple Ridge நகரில் இருக்கும் வீடற்றவர்களுக்கான தற்காலிக தங்குமிடங்களை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அந்நகர நிர்வாகிகள் தயார்செய்து கொடுத்தனர். அதற்கமைவாகவே வீதியோரத்தில் உள்ள குறித்த தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டன.
எனினும் தற்பொழுது அவை அங்கிருந்து அகற்றப்பட்டு, அவர்களுகு;கு உரிய ஏனைய ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறிருந்தும் தற்பொழுது அங்கு வீடற்றவர்களின் தொகை அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இந்நிலையிலேயே Maple Ridge நகர நிர்வாகிகள் தற்காலிக முகாம்களை மேலும் ஒன்பது மாதங்களுக்கு அங்கு தொடர்ந்து வைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
இந்த தந்காலிக முகாம்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நேற்று நகர ஆட்சிமன்றக் குழுவினர் ஒன்றிணைந்து கலந்துரையாடினர். இதன் முடிவிலேயே இந்த தீர்மாணம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
161 total views, 161 views today
– See more at: http://www.canadamirror.com/canada/65334.html#sthash.MHrRuaSF.dpuf