வீதியெங்கும் சிதறிக் கிடக்கும் சடலங்கள்
சிரியா அரச படைகள் அலெப்போ பிரதேசத்தில் மேற்கொள்ளும் மிலேச்சத்தனமான மனித படுகொலைகளை கோடிட்டு காட்டும் காட்சிகள் அடங்கிய வீடியோவை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
சிரியாவின் அலெப்போவிலிருந்து தப்பிச் செல்லும் பொதுமக்கள் மீது அஸாத்தின் அரச படைகள் மற்றும் கூட்டணியினர் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதல்கள் காரணமாக வீதிகள் எங்கும் சடலங்கள் சிதறி கிடப்பதை அவதானிக்க முடிகிறது.
சிரிய அரச படைகள் விதித்துள்ள முற்றுகை மற்றும் அவர்களின் தாக்குதலில் இருந்து தமது உயிர்களைக் பாதுகாத்துக் கொள்வதற்காக கிழக்கு அலெப்போ பகுதியையும் மேற்கு பகுதியையும் இணைக்கும் ஒரே ஒரு பாதை மூலமாக அகதிகளாக தப்பிச் சென்றுகொண்டிருந்த பொதுமக்கள் மீது நேற்று முன் தினம் சிரிய அரசபடைகள் மேற்கொண்ட பீரங்கித் தாக்குதல்களில் 45 பொதுமக்கள் கொல்லப்பட்டனர், இதில் அனேகமானோர் பெண்களும் சிறுவர்களுமே என அலெப்போ ஊடக நிலையம் தெரிவித்துள்ளது.