வீட்டு சொந்தகாரர் ஒருவரின் கொடுங்கனவு.
கனடா-தனது வீட்டை வாடகைக்கு கொடுத்த சிமோன் அன்ட்ரூ வாடகை குடியிருப்பாளர்களை முதல் தடவையாக பார்த்த போது மரியாதையான நல்ல மனிதர்கள் போல் தெரிந்ததாக தெரிவித்தார்.
ஆனால் அன்ட்ரூவின் மூன்று-படுக்கை அறைகள், இரு-கார் கராஜ் கொண்ட கிங்ஸ்ரன், ஒன்ராறியோவில் அமைந்துள்ள வீட்டிற்கு வாடகை குடியிருப்பாளர்கள் குடிபுகுந்த கொஞ்சநாளில் குடியிருப்பவர்கள் அதிக மிருகங்களை வீட்டிற்குள் கொண்டு வரத்தொடங்கினர்.ஆனால் எதனையும் சுத்தம் செய்யவில்லை.
ஆடு, முயல்கள், கோழிகள், அத்துடன் காடைகளும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை மட்டுமன்றி பூனைகள் மற்றும் நாய்களும் காணப்பட்டன.
இவற்றை கண்ணுற்ற அன்ட்ரூ அவர்களை வெளியேற்ற முனைந்தார். அவர்களை வெளியேற்ற ஏழு மாதங்கள் சென்றன. அவர்களது வாலிப வயது மகனை கடந்த செப்டம்பர் மாதம் வரை வெளியேற்ற முடியவில்லை.
நிலைமையை ஒன்ராறியோவின் ஆதன உரிமையாளர் மற்றும் வாடகை குடியிருப்பாளர் சபையிடம் (LTB) முறையிட்டதனால் வெளியேற்ற உத்தரவு வழங்கப்பட்டது.
குடியிருந்தவர்கள் கவனகுறைவினால் வாடகை குடியிருப்பை சேதப்படுத்தினர் எனவும் குடியிருப்பிற்கு வாடகை செலுத்தாமல் மிருகங்களை வைத்திருந்து அவைகள் வீடு முழுவதும் சிறு நீர் கழித்து மலம் கழித்து அசுத்தப்படுத்தினர் என (LTB) தெரிவித்தனர்.
ஆனால் சட்டம் எந்த விதத்திலும் தன்னை பாதுகாக்கவில்லை என அன்ட்ரூ தெரிவித்தார். அன்ட்ரூவின் நிலை குறித்து குறிப்பாக எதுவித கருத்தையும் (LTB) தெரிவிக்கவில்லை.
குடியிருந்தவர்கள் வெளியேறிய பின்னர் இரண்டு டிரக் நிறைந்த குப்பைகளை தான் வெளியேற்றியதாக அன்ட்ரூ கூறினார்.
அபாயகரமான பகுதிக்குள் இருப்பதாக உணர்கின்றார்.வீடு மனிதர்கள் குடியிருக்க உகந்ததாக தோன்றவில்லை.
தொழில்முறை கிளீனர்களை வரவழைத்து வீடு பூராகவும் அன்ட்ரூ சுத்தம் செய்தார்.
இவரது நிலைமை குறித்து ஒன்ராறியோ விலங்கு பாதுகாப்பு சமூகம் புலன்விசாரனை செய்கின்றது.