களுத்துறை , மீகஹதென்ன, லிஹினியாவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் கதவை உடைத்து 04 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்ற சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மீகஹதென்ன பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
லிஹினியாவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வசிக்கும் பெண் ஒருவர் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு மீண்டும் வீடு திரும்பியுள்ள நிலையில் தங்க நகைகளைக் கழற்றி வைத்து விட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.
வெளியே சென்ற பெண் மீண்டும் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதையும் தங்க நகைகள் காணாமல் போயிருப்பதையும் அவதானித்துள்ளார்.
பின்னர் இந்த பெண் இது தொடர்பில் மீகஹதென்ன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மீகஹதென்ன பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.