வீடற்றவர்களிற்கு கதகதப்பை ஏற்படுத்தி கொடுத்த ஆறு வயது சிறுவன்.
கனடா-நத்தார் தினத்தன்று Santa தங்களிற்கு என்ன கொண்டு வருவார் என சிறுவர்கள் அனைவரும் காத்திருப்பர். ஆனால்கல்கரியை சேர்ந்த ஆறு வயது சிறுவன் பெறுவதை விட கொடுப்பதில் ஆர்வம் காட்டினான்.
ரேற் பார்க்கர் என்ற இப்பையன் வெள்ளிக்கிழமை வீடற்றவர்களின் தங்குமிடங்களிற்கு சென்று டசின் கணக்கான வீடற்றவர்களிற்கு துயிற் பைகளை வழங்கினான்.பனிப்புயலின் மத்தியில் இந்த காரியத்தை செய்துள்ளான். தங்குமிடத்தில் சிறுவனது பைகளில் ஒன்றை பெற்ற மனிதர் ஒருவர் உலகத்தில் போதிய அன்பு மனிதாபிமானம் அற்ற இக்காலகட்டத்தில் இந்த சிறுவனின் செய்கையை பாராட்டினார்.
நத்தார் தின காலங்களில் இச்சிறுவன் தன் அன்பை மற்றவர்களித்தில் காட்டியமை மிக விசேடமானதென கூறினார்.
கடந்த வருடம் விக்டோரியா B,Cயில் வீடற்றவர்கள் பூங்காவில் உறங்குவதை கண்ட இச்சிறுவனிற்கு இந்த எண்ணம் தோன்றியுள்ளது.
இதனை கண்ணுற்ற சிறுவனிற்கு இத்தகையவர்களிற்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.
இதற்காக கல்கரிக்கு இடம்பெயர்ந்த சில மாதங்களிற்கு முன்னர் தொடங்கி 100 துயிற்பைகளை சேகரித்தான்.
தனது உண்டியலில சேகரித்த ஒவ்வொரு டொலரையும் செலவழித்தான்.
நத்தார் தினத்தில் கதகதப்பான துயிற்பையில் தூங்குவது இதமாக இருக்கும் என தங்குமிடத்தில் இருப்பவர்கள் தெரிவித்தனர்.