விவாகரத்து செய்ய ரூ. 2,023 கோடி கேட்கும் உலக பிரபலத்தின் மனைவி
ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனியை விவாகரத்து செய்யும் அவரது மனைவி அமல் ரூ. 2 ஆயிரத்து 23 கோடி செட்டில்மென்ட் கேட்டுள்ளாராம். பிரபல ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி இங்கிலாந்தை சேர்ந்த மனித உரிமைகள் வழக்கறிஞர் அமல் அலாமுத்தீனை கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
அமல் குழந்தைகள் பெற்றுக் கொள்ள விரும்பி தனது ஆசையை க்ளூனியிடம் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டாராம். பின்னர் அமலின் தொல்லை தாங்காமல் ஒத்துக் கொண்ட க்ளூனி மீண்டும் குழந்தைகள் வேண்டாம் என்று பழைய ரூட்டிற்கே சென்றுள்ளார். இந்த காரணத்தால் அமல் கடுப்பாகிவிட்டாராம். இந்நிலையில் அமலும், க்ளூனியும் பிரிந்து தனித் தனியாக வசித்து வருகிறார்கள்.
அவர்கள் விவாகரத்து செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமல் க்ளூனியை பிரிய அவரிடம் ரூ. 2 ஆயிரத்து 23 கோடி செட்டில்மென்ட் கேட்டுள்ளாராம். இது அடேங்கப்பா செட்டில்மென்ட்டாக அல்லவா உள்ளது என்று பிரமாண்டத்திற்கு பெயர் போன ஹாலிவுட்டே வியக்கிறது. அமல் க்ளூனி மூலம் ஹாலிவுட் வாழ்க்கை பார்த்துவிட்டு படாடோபமாக வாழ்கிறாராம். அமல் ஓவர் செலவு செய்வது க்ளூனிக்கு பிடிக்கவில்லையாம்.