விரைவில் தமிழ் சினிமாவுக்கு வருகிறார் ஜனகராஜ்
தமிழ் சினிமாவில் 80, 90 களில் காமெடியன்களில் கவுண்டமணி , செந்திலுக்கு பிறகு தனக்கென ரசிகர் பட்டாளம் வைத்திருந்தவர் ஜனகராஜ். அவரது உடல்மொழி இன்றளவும் எல்லாராலும் ஈர்க்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில வருடங்களாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த ஜனகராஜ் மீணடும் தமிழ் சினிமாவுக்கு வருகிறார்.
சமீபத்தில் விஜய் ஸ்ரீ என்ற ஒரு புதுமுக இயக்குனர் சொன்ன கதை பிடித்துப்போக ஓகே சொல்லியுள்ளார். விரைவில் அதிகாரபூர்வ தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது