பல்வேறு துறைகளில் சிறந்த சேவையாற்றுபவர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் பத்ம விருதுகள் வழங்கும் விழா இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.
இந்தியாவின் மிக உயரிய விருதாக கருத்தப்படுவது பத்ம விருதுகள். கலை, விளையாட்டு, சமூகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த சேவையாற்றுபவர்களுக்கு பத்ம ஸ்ரீ, பத்ம பூசன், பத்ம விபூசன் போன்ற விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.
இதில் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, சேகர் நாயக், சாக்ஷி மாலிக், தீபா கர்மாகர் உள்ளிட்டோர் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளனர்.