விராட் கோஹ்லியை கேவலப்படுத்திய வங்கதேச வீரர்கள்: கோபத்துடன் வெளியேறியதால் பரபரப்பு
வங்கதேச அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 3 விக்கெட் இழப்பிற்கு 103 ஓட்டங்கள் எடுத்து விளையாடி வருகிறது. இன்னும் ஒரு நாள் மீதம் உள்ள நிலையில் இந்திய அணி எஞ்சியுள்ள 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தி எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்று இந்திய ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணிக்கு தற்போது தலைவராக உள்ள விராட் கோஹ்லியை வங்கதேச வீரர்கள் எப்படி கேவலப்படுத்தியுள்ளனர் என்பது தொடர்பான வீடியோ இணையத்தில் உலா வரத் தொடங்கியுள்ளது.
அதில் கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் போது வங்கதேச பந்துவீச்சாளர் ரூபுல், விராட் கோஹ்லிக்கு பந்து வீச அதை எதிர்கொண்ட கோஹ்லி தடுத்து ஆட, பந்தை பிடித்த ரூபுல் வேண்டுமேன்றே கோஹ்லியை கோபப்படுத்தினார்.
இதை மறக்காத ரூபுல் அடுத்து வந்த 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் கோஹ்லியை வீழ்த்தி அவரை கிண்டல் செய்வது போல், அவரை பின் தொடர்ந்து கூச்சலிட்டார். இதில் ரூபல் மட்டுமின்றி அன்றைய வங்கதேச தலைவரான மோர்தசாவும் ஆக்ரோசத்துடன் கூச்சலிட்டார்.
இதை விராட் கோஹ்லி அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்கமாட்டார் என்று வங்கதேச ரசிகர்கள் தங்கள் சமூகவலைத்தளங்கள் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.