நாசா அனுப்பிய சக்தி வாய்ந்த ஹப்பிள் விண்கலத்தின் டெலஸ்கோப் சமீபத்தில் வியாழன் கிரகத்தை மிக அருகில் போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.
அமெரிக்க நாசா மையம் விண்வெளியில் உள்ள கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை ஆய்வு செய்வதற்கு சக்தி வாய்ந்த ஹப்பிள் விண்கலத்தை அனுப்பியுள்ளது.
அதில், அதிநவீன டெலஸ்கோப் பொருத்தப்பட்டுள்ளது. அந்த ஹப்பிள் விண்கலத்தின் டெலஸ்கோப் அண்மையில் வியாழன் கிரகத்தை மிக அருகில் புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.
இது கடந்த 3-ஆம் திகதி பூமிக்கு மிக அருகில் வந்த வியாழன் கிரகத்தை துல்லியமாக புகைப்படம் எடுத்துள்ளது. வியாழன் பூமியில் இருந்து சுமர் 60 கோடி கி.மீற்றர் தூரத்தில் உள்ளது.
தற்போது வியாழன் பூமியில் இருந்து சூரியனுக்கு எதிரே வந்து நிற்கிறது. அதாவது பூமி, சூரியன், வியாழன் ஆகிய 3 கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் வியாழன் பூமிக்கு அருகில் உள்ளதால், ஹப்பிள் டெலஸ்கோப் அதை தெளிவாக படம் பிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமிக்கு அருகில் இருப்பதால் வியாழன் கிரகம் மிகப்பெரிய சிவப்பு புள்ளி போன்று வெளிச்சமாக தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பகலை விட இரவில் இதை தெளிவாக காணமுடியும் என்று கூறப்படுகிறது.