விமான விபத்தில் சிக்கிய கால்பந்து வீரர்களின் இறுதிச் சடங்கு: கொட்டும் மழையில் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
கொலம்பியா நாட்டில் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த கால்பந்து வீரர்களின் உடல் சொந்த நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு திரளான பொதுமக்கள் முன்னிலையில் இறுதிச்சடங்கு நடைபெற்றுள்ளது.
கொலம்பியா விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் 50 சவப்பெட்டிகளில் வைக்கப்பட்டு குறித்த கிளப்பின் உறுப்பினர்களால் Conda Arena விளையாட்டு மைதானத்திற்கு எடுத்து வரப்பட்டது.
பிரேசில் ராணுவ வீரர்களால் குறித்த சவப்பெட்டிகளை திறந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக அனுமதிக்கப்பட்டனர். கொட்டும் மழையையும் பொருட்ப்படுத்தாமல் மொத்த ஜனத்தொகையில் பாதிக்கு மேல் அந்த விளையாட்டு அரங்கில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் குவிந்திருந்தனர்.
மழையில் நனைந்திருந்தாலும் மக்களில் கணகள் அழுது சிவந்திருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளனர். Chapecoense உறுப்பினர்கள் அனைவரும் எங்கல் குடும்பத்தினர், அவர்கள் எங்கள் இதயத்தில் இருக்கிறார்கள் என கண்ணீருடன் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இறுதி அஞ்சலி கூட்டத்தில் பிரேசில் ஜனாதிபதி கலந்து கொண்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துள்ளார்.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் நடைபெற இருந்த கால்பந்து விளையாட்டில் பங்கேற்க பிரேசில் நாட்டின் Chapecoense கிளப் வீரர்கள் கடந்த நவம்பர் 28-ம் திகதி LaMia Flight 2933 என்ற விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.
இந்த விமானத்தில் 22 கால்பந்து விளையாட்டு வீரர்கள், 21 செய்தியாளர்கள், விமான குழுவினர் உள்ளிட்ட 71 பேர் பயணம் செய்துள்ளனர். பொலிவியா நாட்டில் உள்ள Santa Cruz என்ற விமான நிலையத்தில் இருந்து கொலம்பியாவில் உள்ள Medellin விமான நிலையத்திற்கு அந்த விமானம் புறப்பட்டுள்ளது.
ஆனால், துரதிஷ்டவசமாக நிகழ்ந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 71 பேர் பரிதாபமாக பலியாயினர்.