விமான கண்காட்சியில் விமானம் மோதி அனுபவம் மிக்க விமானி மரணம்.
கனடா-அல்பேர்ட்டாவில் ஞாயிற்றுக்கிழமை விமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் விமானம் மோதுப்பட்டதால் விமானி கொல்லப்பட்டதை தொடர்ந்து கண்காட்சி ரத்துச்செய்யப்பட்டது.
4,000-மணித்தியாலங்கள் அனுபவம் வாய்ந்த கல்கரியை சேர்ந்த விமானி அவரது T-28 Trojan விமானம் கோல்ட் லேக்கில் நடைபெற்று கொண்டிருந்த விமான கண்காட்சியில் மோதியதால் மரணமடைந்துள்ளார்.
விமானி புறூஸ் இவான்ஸ் ஆகிய இவர் பிற்பகல் 2-மணியளவில் விமானத்தில் பறந்து கொண்டிருக்கையில் சம்பவம் நடந்துள்ளது.
எட்மன்டனில் இருந்து 290-கிலோ மீற்றர்கள் தொலைவில் CFB Cold Lake-ல் வருடந்தோறும் நடைபெற்று வருகின்றது.கனடா மற்றும் உலகம் பூராகவும் இருந்து முதன்மை இராணுவ வீரர்கள் இந்த பந்தய ஆட்டத்தில் கலந்து கொள்வர்.விபத்து நடந்த பின்னர் கண்காட்சி ரத்துச்செய்யப்பட்டது.
இவான்ஸ் 59வயதுடையவர். பிரான்சில் மார்வில் என்ற இடத்தில் பிறந்தவர்.இவரது தந்தை றோயல் கனடிய விமான படையில் இருந்தவர்.
இவான் அனுபவம் மிக்க ஒரு விமானி.
2007ல் T-28B Trojan விமானத்தை வாங்கினார். Firefly வான்வழி கருத்துகணிப்பு நிர்வாக அதிகாரியாக பணியாற்றியவர்.
இவரது விமானம் கீழே விழுந்த போது கோல்ட் லேக் மேயரும் இவரது குடும்பத்தினரும் விமான கண்காட்சியில் இருந்துள்ளனர்.
இச்சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.