விமானத்தை தகர்க்க முயற்சித்த நிர்வாண மனிதரால் பரபரப்பு!
அமெரிக்காவில் மர்ம நபர் ஒருவர் விமான ஓடுதளத்தில் நிர்வாணமாக ஓடி, டிரக் மூலம் விபத்து ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம், Omaha என்ற இடத்தில் உள்ள Eppley விமானதளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அப்போது விமானதளத்தை சுற்றியுள்ள வேலிப் பகுதியில் ஒருவர் நடமாடிக் கொண்டிருந்தார். விமானம் புறப்படும் நேரத்தில் அவர் திடீரென தனது ஆடைகளை களைந்து நிர்வாணமாக வேலியின் மீது ஏறி குதித்தார்.
பின்னர் விமான ஓடுதளத்தில் ஓடிய அவர், அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட டிரக்கை எடுத்துக் கொண்டு விமானத்தின் மூக்கு பகுதியில் மோதி விபத்தை ஏற்படுத்தினார்.
இதனையடுத்து அந்த மர்ம நபரை அதிரடியாக கைது செய்த பொலிசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் 12 பயணிகள் மற்றும் 2 அதிகாரிகளுக்கு லோசான காயம் ஏற்பட்டது.
பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இது மிகவும் மோசமான செயல். அந்த நபர் தனது ஆடைகளை களைந்து, அங்கு ஏற்கனவே புறப்பட தயாராக இருந்த டிரக்கை எடுத்துக் கொண்டு விமானத்தில் மோதி விபத்து ஏற்படுத்தினார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்
– See more at: http://www.canadamirror.com/canada/68707.html#sthash.RWG7oiCg.dpuf