கூட்டு எதிர்க் கட்சியில் உள்ள பங்காளிக் கட்சிகளிடையே எந்தவித உள்வீட்டு மோதல்களும் இல்லையென கூட்டு எதிர்க் கட்சியின் பிரதித் தலைவர் ரஞ்ஜித் சொய்ஷா எம்.பி. தெரிவித்துள்ளார்.
விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, உதய கம்மம்பில தலைமையிலான தூய ஹெல உறுமய என்பவற்றை கூட்டு எதிர்க் கட்சியின் செயற்பாடுகளிலிருந்து ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வரும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஒன்று நெருங்கியுள்ள நேரத்தில் இதுபோன்ற பிரச்சாரங்களை எதிர்த் தரப்பினர் திட்டமிட்டு பரப்பி வருவதாகவும் சொய்ஷா மேலும் கூறியுள்ளார்.