அடுத்த ஆண்டு முதல் அனைவரும் விண்வெளி சுற்றுலா செல்லும் வாய்ப்பை அமெரிக்க நிறுவனம் வழங்க உள்ளது. இதற்கு ரூ.1.60 கோடி இருந்தால் போதும். விண்வெளி ஆராய்ச்சிதான் இதுவரை நடந்து வந்து இருக்கிறது.
தற்போது முதன்முறையாக அனைவரையும் விண்வெளி சுற்றுலா அழைத்துச் செல்லும் புதிய திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று மேற்கொண்டது. மேற்கு டெக்ஸாசில் உள்ள புளூ ஆர்ஜின் என்ற அந்த நிறுவனம் விண்வெளிக்கு பொதுமக்களும் பயணம் செய்யக்கூடிய அளவுக்கு கேப்சூல் வகை விண்கலத்தை தயார் செய்து வந்தனர்.
அதை கடந்த செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக விண்ணில் ஏவி சோதனை செய்துள்ளனர்.இதற்கு ஏற்கனவே பயன்படுத்திய ராக்கெட்டுகள் உபயோகப்படுத்தப்பட்டன.
இதனால் விண்வெளிக்கு செல்லும் செலவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த விண்கலம் மிகப்பெரிய ஜன்னல்கள் வடிவமைப்புடன் இந்த விண்கலம் அமைந்துள்ளது. 2.4 அடி அகலம், 3.6 அடி உயரம் கொண்டதாக உள்ளது. இதில் 6 இருக்கைகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக விண்கலம் எந்த இடத்தில் சென்று கொண்டு இருக்கிறது என்பதை அறியும் வகையில் தனித்தனி திரை வைக்கப்பட்டுள்ளது.
அவசரமான காலங்களில் பயணிகள் பாராசூட் முறையில் தப்பிக்கும் வகையிலான வசதியும் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்த விண்கலம் மூலமாக பயணிகள் ஒருநாள் விண்வெளி சுற்றுலா செல்ல முடியும். பூமியில் இருந்து 100 கிமீ மேலே இந்த விண்கலம் பயணிகளை கொண்டு செல்லும்.
அதன் மூலம் பல்வேறு கோள்களை அருகில் சென்று பார்க்க முடியும். இதற்கான கட்டணம் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் சமீபத்தில் 6 பயணிகள் மற்றும் இரண்டு பைலட்டுகள் செல்ல ரூ.1.60 கோடி செலவாகி உள்ளது. தற்போது புளூ ஆர்ஜின் நிறுவனம் இந்த பயணத்திற்காக கூடுதலாக ரூ.3 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி உள்ளது.
யார் வேண்டுமானாலும் செல்லலாம்புளூ ஆர்ஜின் நிறுவன செயல் தலைவர் பாப் ஸ்மித் இந்த திட்டம் குறித்து கூறுகையில்,’ எங்களது சோதனை முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்துள்ளன. படிப்படியாக எங்கள் திட்டத்தை நவீனப்படுத்தி வருகிறோம். அனைவரும் இந்த பயணத்தில் செல்லலாம். எங்களிடம் பணம் கட்டி செல்லும் பயணிகள் நலனில் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது உள்ளது. அடுத்த ஆண்டு திட்டமிட்டபடி விண்வெளி சுற்றுலா பயணம் தொடங்கும்’ என்றார்.