உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற 20 புதிய கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் நாசா மூலம் வாண்வெளி மண்டலத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட கெப்ளர் விண்கலம் தனது மிகப்பெரிய விண்தொலைநோகி மூலம் ஏராளமான கிரகங்களை கண்டுபிடித்துள்ளது.
இந்த விண்கலம் மூலம் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற 20 புதிய கிரகங்களையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மேலும் அடுத்த பூமியை கண்டுபிடிக்கும் எர்த் 2.o என்ற திட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிரகங்கள் பூமியை போலவே இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.