விடுதலைப் புலிகள் உயிர்ப்புடன் இருப்பதை விரும்பிய அமெரிக்கா..! பிரபாகரனை காப்பாற்றவும் கடைசியில் போராடியது..!
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்றும் தளபதிகளையும் காப்பாற்றுவதற்காக அமெரிக்க இறுதி நேரத்தில் பாரிய முயற்சிகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரியும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றியவருமான டயா கமேஜ் எழுதியுள்ள நூலில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
“Tamil Tigers’ Debt to America: US Foreign-Policy Adventurism & Sri Lanka’s Dilemma” எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள குறித்த நூலில் 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தம் குறித்து விபரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் மற்றும் தளபதிகளை காப்பாற்றுவதற்காக அமெரிக்கா முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்த விரிவாக விபரிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் பாதுகாப்பு வலயங்கள் என அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இலங்கை இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை அமெரிக்கா விரும்பவில்லை எனவும், தாக்குதல் நடத்துவதை அமெரிக்கா எச்சரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது வெளியுறவு துறை அமைச்சராக இருந்த ஹிலாரி கிளிங்டன் இலங்கையை பணிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சர்வதேச நாணயநிதியம் ஊடாக இலங்கை மீது தடைகளை ஏற்படுத்தி, இலங்கையை பணிய வைக்கும் முயற்சியில ஈடுபட்டதாக அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என் அமெரிக்க தடை செய்திருந்தது. எனினும், அந்த அமைப்பினால் தமக்கு எந்த பாதிப்பும் இல்லை என கருதியதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண புலிகள் அமைப்பு உயிர்ப்புடன் இருக்க வேண்டும் என அமெரிக்க விரும்பிய அதேவேளை, இலங்கையை இரண்டாக பிரிக்க அமெரிக்கா விரும்பவில்லை எனவும் அந்த நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் தளபதிகளை பாதுகாப்பாக வெளியேற்ற கடைசிநேரங்களில் அமெரிக்கா போராட்டம் நடத்தியதாக இந்திய முன்னாள் தேசிய பாதுகாப்பு செயலர் சிவசங்கர் மேனன் எழுதியுள்ள நூலிலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.