வட பகுதியின் 10 பாதுகாப்பு மூலோபாய கேந்திர நிலையங்களில் இருந்து இராணுவத்தை நீக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு மூலோபாய கேந்திர நிலையங்களில் முள்ளிக்குளம் மற்றும் இரணைமடு உள்ளடங்கும்.
யுத்தம் நிறைவடைந்து பல வருடங்கள் கடந்துள்ள நிலையில. இந்த இடங்களில் இராணுவத்தினர் தங்கியிருப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு, அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது.
விடுதலை புலிகள் தங்களின் பாதுகாப்பு கேந்திர நிலையமாக நடத்தி சென்ற இடங்களில் இராணுவத்தினரை அகற்றுவதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நோக்கமாகும்.
இரணைமடுவில் புலிகளின் விமான ஓடுபாதையில் இருந்து இராணுவத்தினர் வெளியேற்றபட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக பாதுகாப்பு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.