1992 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளினால் தாக்கி வீழ்த்தப்பட்ட, இலங்கை விமான படைக்கு சொந்தமான விமானத்தின் பாகங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
குறித்த விமானத்தின் பாகங்கள் யாழ். ஆணையிறவு இயக்கச்சி பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளன.
1992 ஆண்டு பலாலியில் உள்ள விமான படையினருக்குச் சொந்தமான வை-08 என்ற விமானம் இயக்கச்சிப் பகுதியில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
விமான படையினரின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், நேற்று செவ்வாய்க்கிழமை சம்பவ இடத்திற்கு சென்று உயர் அதிகாரிகள் பார்வையிட்டதுடன், விமானத்தின் பாகங்களையும் மீட்டுள்ளனர்.
சுமார் 25 வருடங்களின் பின்னர் குறித்த விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், சில பாகங்களையும் விமான படையினர் மீட்டுள்ளனர்.