விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு ஆதரவாக ஒரு தேரர்
அந்தவகையில் புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு சுயதொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என தென்மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சமித்த தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இவர்களுக்கு உரிய தீர்வினைப்பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அவ்வாறு இல்லாவிட்டால் மீண்டும் பிரிவினைவாத குழுக்களுடன் அவர்கள் இணைந்துகொள்வார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைக்காலங்களில் புனர்வாழ்வு பெற்ற 12000 விடுதலைப்புலிகளை மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும், அவர்கள் ஆபத்தானவர்கள் என்ற கருத்துக்களை சில அரசில்வாதிகள் முன்வைத்து வருகின்றனர்.
மேலும் வடக்கில் இடம்பெறும் வாள்வெட்டுக்கள் மற்றும் சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களே காரணம் என்று கூறுவதுடன், பலர் கைது செய்யப்படுவதும் நடைபெற்றுகொண்டுதான் இருக்கின்றன.
அந்தவகையில் இவற்றுக்கு மாறாக தென்மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சமித்த தேரர் முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.