விஜய் சேதுபதியால் மக்களுக்கு அவதியா? போலீஸ் குவிப்பு
விஜய் சேதுபதி தற்போது முன்னணி நடிகர்கள் மட்டுமில்லாமல் திரை உலகை சேர்ந்த பலரின் பார்வையையும் தன் பக்கம் திருப்பியவர்.
தொடர்ந்து வெளிவரும் அவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. புதுப்புது கதைகளாக தேர்ந்தெடுக்கும் இவர் தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கவண் படத்தில் நடித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு நேற்று சென்னை வியாசர்பாடி பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் நடந்ததாம். இதற்காக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதாகவும் தகவல்கள் வந்தது.
இதனால் அப்பகுதியில் கூட்டம் கூடியதால் மக்கள் வெளியே கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.