விஜய்யை சீண்டிப்பார்க்கும் நயன்தாரா
இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இவருக்கு ஒன்று என்றால் ரசிகர்கள் கடைசி வரை விட்டுக்கொடுக்காதவர்கள்.
கத்தி படத்தின் போது ஏற்பட்ட பிரச்சனையின் போது ரசிகர்கள் இவருக்கு பலமாக இருந்தனர், இந்நிலையில் கத்தி என்னுடைய கதை என்று மீஞ்சூர் கோபி கூறி அப்போது பெரிய சர்ச்சையை உண்டாக்கினார்.
இவர் தற்போது நயன்தாரா நடிக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளார், இந்த படத்தில் நயன்தாரா மாவட்ட கலெக்ட்டராக நடிக்கிறாராம், அது மட்டுமின்றி தண்ணீர் பிரச்சனைக்காகவும் போராடுவாராம்.
கத்தி படமும் இதே பிரச்சனையை தான் பேசியது குறிப்பிடத்தக்கது, பார்ப்போம் படத்தில் என்னென்ன செய்துள்ளார்கள் என்பதை..!