இளையதளபதி விஜய் மீதான பார்வைகள் பலருக்கும் பல கோணங்களில் உண்டு. அவர் கடந்த வந்த பாதையில் சில தடைக்கற்களும், எதிர்ப்புகளும், சமாளிப்புகளும் அதிகம்.
நீண்ட நாட்களாகவே அவர் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்புகள் ரசிகர்கள் மத்தியில் உண்டு. அவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக தொடங்கியதுமே விஜயின் படங்களில் சமூகம் சார்ந்த விசயங்கள் தொடர்ச்சியாக இடம் பெற்று வந்தன.
தலைவா படத்தில் Time To Lead என்ற வசனம் இடம்பெற்றது. அப்போது சிறு புரட்சி போல எழுந்தாலும் அப்படம் வெளியாக இருந்த தடைகளுக்கு இது தான் காரணம் என சொல்லப்பட்டது. அரசியல் பஞ்ச்கள் படங்களிலும் உண்டு.
சமீபத்தில் கூட விவசாயிகள் பற்றி அவர் பேசியது பெரும் முக்கியதுவம் பெற்றது. தற்போது அரசியலில் அடி எடுத்துவைக்க சில ஆலோசனைகள் நடந்து வருவதாகவும் அவரின் பிறந்தநாளில் இது பற்றிய முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.