விசாரணைகளை துரிதப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டவல்லுநர்கள் அடங்கிய இந்தக் குழுவின் தலைவராக சிரேஷட் ஜனாதிபதி சட்டத்தரணி அயேஷா ஜினசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல்கள் மற்றும் முறைக்கேடுகள் தொடர்பாக விசாரணைகள் நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்டு 4 வருடங்களை எட்டியுள்ள நிலையில் பல்வேறு விசாரணைகள் தீர்க்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் விசாரணைக்கு போதுமான அதிகாரிகள் இன்மையால் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரி பதவியேற்ற பின்னர் உருவாக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவானது கடந்த 4 வருடங்களாக அரச நிறுவனங்களில் இடம்பெற்ற இலஞ்ச ஊழல், அரச வளங்கள் தவறாக பயன்படுத்தப்படுதல் தொடர்பாக கிடைத்த முறைப்பாடுகளை விசாரணை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.