கண்டி, தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மிதந்த நிலையில் இரண்டு ஆண்களின் சடலங்கள் நேற்று (30) மீட்கப்பட்டுள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் கண்டறியப்படாத நிலையில், ஒருவர் 20 முதல் 25 வயதுக்குட்பட்டவர் எனவும் மற்றையவர் 30 முதல் 35 வயதுக்குட்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களது சடலங்கள் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.