வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையைக் கடுமையாகச் சாடி வெளியிட்ட அறிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே பதிலடி கொடுக்கத் தீர்மானித்துள்ளார் என்று தெரியவருகின்றது. பதிலடி அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரவித்தன.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையைக் கடுமையாகச் சாடி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடந்த செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியிட்டிருந்தார். தான் எந்தவொரு கட்சியையும் சார்ந்தவன் அல்லன் என்றும், கட்சித் தலைமை தன்னைக் கட்டுப்படுத்த முனைகின்றது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த அறிக்கைக்கான பதிலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே வெளியிடுவார் என்று கூறப்படுகின்றது.
முதலமைச்சரின் அறிக்கையால் கடும் கோபமடைந்துள்ள இரா.சம்பந்தன் விரைவில் பதிலடி அறிக்கை வெளியிடுவார் என்றும், அதுவரை கட்சியிலுள்ள ஏனையோர் இது தொடர்பில் பதிலளிக்கமாட்டார்கள் என்றும் தெரியவருகின்றது.