நான்கு நாட்கள் வேலை வாரம் திட்டத்தை சோதனை அடிப்படையில் பிரித்தானியா நடைமுறைப்படுத்தியுள்ளது.
70 நிறுவனங்களைச் சேர்ந்த 3,300 தொழிலாளர்கள் நான்கு நாட்கள் வேலை வாரத் திட்ட சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சோதனையை ஆக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும், போஸ்டன் கல்லூரி நிபுணர்களும் இணைந்து செயல்படுத்த உள்ளனர். அலுவலக அமைப்பை கொண்ட 70 நிறுவனங்கள் சோதனையில் பங்கேற்கின்றன.
நான்கு நாட்கள் வேலை வாரம் திங்கட்கிழமை முதல் எவ்வித சம்பளக் குறைப்பும் இல்லாமல் நடைமுறைப்படுத்த நிறுவனங்கள் முடிவு செய்திருக்கின்றன.
ஆறு மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும், மன அழுத்தம், சோர்வு, வேலை மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் திருப்தி உள்ளிட்டவைகளை கூடுதல் நாள் விடுமுறை மூலம் பணியாளர்கள் கையாள்வதை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.