வானில் திடீரென்று தோன்றிய காளான் வடிவிலான மேகம்: அச்சத்தில் பொதுமக்கள்


சைபீரியாவின் கெமரோவொ பகுதியில் திடீரென்று காளான் வடிவிலான மேகம் தோன்றியுள்ளது. இதைப்பார்த்த மாக்கள் ஏதும் அணுகுண்டு சோதனையா அல்லது தீவிரவாத தாக்குதலா என அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
சிலர் சமூகவலைத்தளங்களில் இந்த புகைப்படத்தை பதிவேற்றியுள்ளனர். ஆனால் உள்ளூர் மக்கள் தான் மிகவும் அச்சமுற்று, அப்பகுதியில் அமைந்திருக்கும் சுரங்க தொழிலாளர்களை விசாரித்துள்ளனர்.
ஆனால் சுரங்கத்தில் ஏதும் விபத்து நேரவில்லை என்ற தகவல் வந்துள்ளது. இது இப்படி இருக்க, சாலையில் கடந்து சென்ற வாகன ஓட்டிகள் திடீரென்று உருவான இந்த காளான் மேகத்தை உற்சாகத்துடன் ரசித்து அதை படம் பிடித்து தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி மகிழ்ந்துள்ளனர்.
சிலர் சுவாசியமாக, இயற்கை காளான் விவசாயிகளுக்கு சமிஞ்ஞை அளித்துள்ளது, உங்கள் காளான்களை அறுவடை செய்யும் காலம் வந்து விட்டது என பதிவிட்டுள்ளனர்.
ஆனால் அச்சத்தில் உறைந்த உள்ளூர் மக்களை தேற்றும் பொருட்டு அவசர சேவை ஊழியர்கள் விரைந்து வந்து கிராமப்பகுதிகளில் சென்று குறிப்பிட்ட மேகம் குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.