இந்திய அணியில் தற்போது உள்ள வீரர்களில் நீக்க முடியாத வீரராக உள்ளவர் ரவீந்திர ஜடேஜா.
ராஜ்புத் வம்சத்தை சேர்ந்த ஜடேஜா, நடுத்தரக் குடும்பத்தில் வாட்ச்மேனுக்கு மகனாக பிறந்து, இன்று பலரும் அறிந்த பிரபலமாக ஜடேஜா வலம் வருகிறார்.
17 வயதில் தன் தாயை இழந்து தன் சகோதரி குடும்பச் சுமையை தன் தோளில் சுமந்தார் ஜடேஜா.
இந்த உயரத்தை அடைவதற்கு அவர் அடைந்த துன்பங்கள் எத்தனை, அவர் கிரிக்கெட் உலகிற்குள் வருவதற்கு வாங்கிய அடிகள் எத்தனை என்பது தொடர்பான வாழ்க்கை வரலாறு தான் இன்று…
இந்திய அணியின் பண்முக ஆட்டக்காரர் ரவீந்தர ஜடேஜா 1988 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி குஜராத்தின் Navamghed பகுதில் பிறந்தார்.
ஜடேஜா பிறந்த சமயத்தில் அவரது குடும்பம் ஒரு படுக்கையறை கொண்ட வீட்டில் வாழ்ந்து வந்தனர்.
ஜடேஜாவின் அம்மா லதா, அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்து குடும்பத்தை காப்பாற்றினார்.
ஜடேஜாவின் தந்தை அனிருத் ஜடேஜா, சரியான வேலை இல்லாமல் சின்ன சின்ன வேலைகளை செய்து குறைந்த வருமானத்தை மட்டுமே ஈட்டி கொடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஜடேஜாவுக்கு 10 வயதில் கிரிக்கெட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட்டிற்காக பயிற்சி மேற்கொள்ளும் போது சீனியர் வீரர்கள் பலர் கிண்டல் அடித்துள்ளார்.
இதனால் அவர் இரவு நேரங்களில் அழுவாராம். மஹேந்திரசின்ஹ் செளஹான் இவர் தான் ஜடேஜாவின் பயிற்சியாளர், பயிற்சியில் கடுமையான கட்டுப்பாட்டையும், ஒழுக்கத்தையும் கையாளுவார்.
வேகப்பந்து வீச்சாளராக கிரிக்கெட் உலகில் தன் பயணாத்தை துவக்கிய ஜடேஜா, பயிற்சியாளர் செளஹானின் அறிவுரையின் பேரில் பின்னர் இடதுகை சுழற்பந்து வீச்சாளராக மாறினார்.
ஜடேஜாவை பலமுறை செளஹான் திட்டி அடித்துள்ளார். ஒரு மேட்சில், ஜடேஜா பல ஓட்டங்களை விட்டு கொடுத்த போது, போட்டியின் இடையில் செளஹான் அவரை பல பேர் முன்னிலையில் கன்னத்தில் அறைந்துள்ளார்.
செளஹான் அளித்த தீவிர பயிற்சி, ஜடேஜாவின் விடா முயற்சியால் 16 வயதில் 19 வயதுக்கு உட்பட்ட இந்திய கிரிக்கெட் அணியில் 2005-ஆம் ஆண்டில் விளையாடினார்.
அவர் 2008-இல் உலகக் கிண்ணம் போட்டியில் அதே இந்திய அணிக்கு துணை தலைவராகவும் விளங்கினார்.
இதைத் தொடர்ந்து துலீப் டிராபி, ரஞ்சி டிராபி என பல தொடர்களில் ஜடேஜா தனது சாதனைகளை பதிவு செய்தார். ஒரு தொடரில் மூன்று சதத்தை அடித்து இந்திய கிரிக்கெட் அணி தேர்வாளர்களை தன் பக்கம் திரும்ப வைத்தார்.
அதன்மூலம் சர்வதேச விளையாட்டுகளில் விளையாட இந்திய அணியில் தேர்வானார். தனது முதல் சர்வதேச போட்டியை 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இலங்கைக்கு எதிராக தொடங்கினார்.
இத்தொடரில் ஜடேஜா 60 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆகாமல் இலங்கை எதிரான போட்டியில் விளையாடினார்.
பலமுறை இந்திய அணி வெற்றிபெறும் வகையில் தன் பங்கை சிறப்பான பண்முக ஆட்டக்காரராக ஆடியுள்ளார் ஜடேஜா. இப்படி சிறப்பாக செயல்பட்டு வந்த ஜடேஜா கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன் டிராபி தொடரில் முக்கிய வீரராக பார்க்கப்பட்டார்.
அத்தொடரில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரரானார். ஆகஸ்ட் மாதம் 2013-ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் உலகின் நம்பர் ஒன் பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரான அனில் கும்ப்ளேவுக்கு பின் இந்த இடைத்தை பிடித்த இந்தியர் ஜடேஜா மட்டுமே.
இப்படி பல தொடர்களில் அசத்திய ஜடேஜாவை ராஜாஸ்தான் ராயல்ஸ் அணி 2008 ஆம் ஆண்டே இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு வாங்கியது.
அதன் பின் ஜடேஜாவின் திறமையைக் கண்டு ஐபில் அணிகள் போட்டி போட்டுக் கொண்டு அவரை வாங்க முன்வந்தன. இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை வாங்கியது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஜடேஜாவும், மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினும் ஐபிஎல் தொடரில் மற்ற அணியினரை மிரட்டினர்.
அண்மையில் நடைபெற்று முடிந்த அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தன்னுடைய மாயாஜால சுழற்பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டம் என்று இந்திய அணியின் தலைவர விராட் கோஹ்லியையவே மிரள வைத்தார் ஜடேஜா.
விராட் கோஹ்லி கூட பேட்டியில், ஜடேஜா ஒரு வேற லெவல் வீரர் என்று கூட புகழாராம் சூட்டினார். இப்படி நடுத்தர குடும்பத்தில் பிறந்து, இன்று நாடே பாராட்டும் ஒரு வீரராக உள்ளார் ஜடேஜா.
மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்