ரொறொன்ரோ-ஸ்காபுரோ கோல்டன் மைல் பகுதியில் மின்சாரம் செயலிழந்ததுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். சனிக்கிழமை இரவு கார் ஒன்று ஹைட்ரோ கம்பத்துடன் மோதியதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
சனிக்கிழமை இரவு 9.07மணியளவில் 777-வாடன் அவெனியுவிற்கு தீயணைப்பு பிரிவினர் அழைக்கப்பட்டுள்ளனர்.
எஸ்யுவி ஜீப் ஒன்று மின்கம்பத்தை இடித்துள்ளது.
மின் கம்பத்திலிருந்து உயிரான வயர்கள் ரிரிசி பேரூந்து ஒன்றின் மேல் விழுந்து தீப்பற்றியதாக கூறப்படுகின்றது. வாகனத்தின் சாரதி கம்பத்துடன் மோதுவதற்கு முன்னர் ஆக்ரோசமாக நடந்து கொண்டதாக சம்பவத்தை கண்ட-தன்னை ஜெனா என அடையாளம் தெரிவித்த- பெண் CP24செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.
மின் கம்பம் சரிந்து விழுந்து தீப்பிடித்து வாகனத்தின் மேல் விழுந்து விட்டது. ஒருவர் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.வாகனத்தில் விபத்து நடந்த சமயம் இருவர் இருந்துள்ளனர்.
வாடன் அவெனியு தெற்கு எக்லிங்ரன் அவெனியு கிழக்கு பகுதி விசாரனைக்காக மூடப்பட்டது.
.