வளிமண்டல ஒட்சிசனின் உருவாக்கத்திற்கு மூல காரணமாகும் புதைபடிவ எரிபொருள் உற்பத்தி
Wisconsin-Madison ஆய்வாளர்கள் வளிமண்டல ஒட்சிசனின் அதிகரிப்புக்கும், புதைக்கப்படும் பெருமளவு காபன் உள்ளடக்கமுள்ள சேதனப் பதார்த்தங்களுக்கும் தொடர்பிருப்பதாக சொல்கிறார்கள்.
ஒட்சிசனானது இரசாயன தாக்கத்தை தூண்டி உணவிலிலுள்ள சக்தியை உணிரினங்கள் பயன்படுத்தக்கூடிய சக்தியாக மாற்றுகின்றது.
ஒளித்தொகுப்பாளிகள் மாறாக வளிமண்டல காபனீரெட்சைட்டை சேதனப் பாதர்த்தமாக மாற்றுகின்றது. இதன் போது ஒட்சிசனன் வளிமண்டலத்திற்கு விடுவிக்கப்படுகிறது.
தற்போதுமேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து, புதைக்கப்படாதவிடத்து தாவரப் பதார்த்ங்கள் ஒட்சியேற்றப்பட்டு சேதனச்சேர்வையிலுள்ள காபன் வளிமண்டலத்திற்கு காபனீரொட்சைட்டாக விடுவிக்கப்படுகிறது. இச் செயற்பாடு ஒட்சிசன் தொடர்பினாலேயே நிககழ்த்தப்படுகிறது.
ஆகையால் விளிமண்டவ ஒட்சிசன் தேக்கத்தை அதிகரிக்க வேண்டுமானால் மேற்கண்ட சேதனப்பார்த்தங்கள் வளிமண்டல தொடுகையற்றிருத்தல் வேண்டும்.
மேற்படி பதார்த்தங்கள் நிலவியல் செயற்பாடுகளால் பதைக்கப்படுமிடத்து அதுவே நடைபெறுகிறது.
இவ் ஆராய்ச்சியின் போது அடையல் பாறைகளின் உருவாக்கத்திற்கும் அதாவது சேதன படிமத்தின் அளவிற்கும், வளிமண்டல ஒட்சிசனின் அளவிற்குமான வரைபு நேர்கோடாக அமைவது இனங்காணப்பட்டது.
இது இரண்டுக்குமிடையிலான தொடர்பை காட்டுவதாகவே அமைகிறது.
மேற்படி வரைபில் 2.3 billion வருடங்களுக்கு முன்னர் சிறிய அளவிலான உயர்ச்சியும், 500 million வருடங்களுக்கு முன்னரான காலப்பகுதியில் பாரியளவிலான உயர்ச்சியும் காணப்பட்டிருந்தது.