இந்திய அமைதி காக்கும் படைகளால் சிறிலங்காவில்மேற்கொள்ளப்பட்ட பாரதூரமான மனித உரிமை
மீறல்களுக்குத் தீர்வு வழங்கவேண்டிய கடப்பாடு இந்தியஅரசாங்கத்திற்கு உள்ளது. என யாழ் வடமராட்சியில் நேற்று வெளியான வல்வெட்டித்துறை ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள் என்ற அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது
அந்த அறிக்கை இந்திய அரசாங்கத்திற்கு சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-
வல்வெட்டித்துறை படுகொலையிலும் இலங்கையில் இருந்த நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட பாரதூரமான உரிமை மீறல்களிலும் இந்திய அமைதிகாக்கும் படையினரின் வகிபாகம் தொடர்பாக பொறுப்புக்கூறல் மட்டில் சர்வதேச சட்டத்தின் கீழ் தனது கடப்பாடுகளை நிறைவேற்றுவதுடன் இந்திய அமைதிப்படையின் கட்டளை அதிகார வலையமைப்பினையும் மூத்த அதிகாரிகளின் பெயர் பட்டியல்களையும் வெளியிடவேண்டும்.
இவ்வன்முறைகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அவர்களது கட்டளை அதிகாரிகளும் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுஇபொறுப்புக்கூறல் செயற்பாட்டின் குற்றச்சாட்டினை எதிர்கொள்வதை உறுதிப்படுத்தவேண்டும்.
இதன் மூலமாக இவர்களால் இழைக்கப்பட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும்அதனால் ஏற்பட்ட இழப்புகளுக்கும்இவல்வெட்டித்துறை மக்கள் முறைப்பாடுகளை மேற்கொள்வதை ஏதுவாக்கும் நிலையேற்படும்.
பரிகாரங்கள்
வல்வெட்டித்துறைப் படுகொலையில் பாதிக்கப்பட்டமக்களுக்கு இழப்பீடு மற்றும் ஆதரவினை வழங்க
உறுதியளிக்கவும் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களைநிவர்த்தி செய்யவும் அவர்களது குடும்பங்கள் மற்றும்பாதிக்கப்பட்ட வல்வெட்டித்துறைச் சமூகத்திற்குபொருளாதார மற்றும் அடையாள உதவிகளை வழங்குவதையும் மேற்கொள்வதற்கு உறுதியளிக்க வேண்டும்.
ஒரு விரிவான இழப்பீட்டு மற்றும் புனர்வாழ்வு செயல்திட்டத்தை உருவாக்குதல் இதில் பிரதானஉழைப்பாளிகள் காயமடைந்தவர்கள் சொத்திழப்புக்கள்வருமான இழப்புக்கள் வாழ்வாதார இழப்புக்கள்பொருளாதார வாய்ப்புக்களில் இழப்புக்களுக்கானபதிலீடுகள் மருத்துவ மற்றும் உளவியல் சமூக ஆதரவுகள்என்பன உள்ளடக்கப்படல் வேண்டும்
வல்வெட்டித்துறைப் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்கள்மற்றும் அவர்களது குடும்பத்திடமும் வல்வெட்டித்துறைச்சமூகத்திடமும் எழுத்து மூலமான பொது மன்னிப்புக்கோருதல்