அமெரிக்காவின் வர்த்தகம் பாதிப்பதை தடுக்க ஜனாதிபதி டிரம்ப் இரண்டு உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார்.
இதன் மூலம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும், சீனா, ஜப்பான், ஜேர்மனி, மெக்ஸிக்கோ, ஐயர்லாந்து, இந்தியா, வியட்நாம், இத்தாலி, தொன் கொரியா, மலேசியா, தாய்லாந்து, பிரான்ஸ், சுவிஸ், தைவான், இந்தோனேஷியா, கனடா என 16 நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.
இந்த நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் அமெரிக்க சந்தையில் குறைவான விலையில் விற்கப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு 500 பில்லியன் டொலர் நஷ்டம் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கான காரணங்களை அமெரிக்க வர்த்தகத்துறை ஆராய்ந்து 90 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மோசடியான நடவடிக்கைகள் மூலம் அமெரிக்காவில் குவிக்கப்படும் அனைத்து பொருட்களுக்கும், அனைத்து விதமான இறக்குமதி வரிகளையும் விதிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.