வர்த்தக நோக்கமாக தூர கிழக்கு நோக்கி ஒன்ராறியோ முதல்வர்.
கனடா-ஒன்ராறியோ முதல்வர் கத்லின் வின் ஒன்ராறியோவிற்கான வேலை வாய்ப்பு குறித்த நம்பிக்கையுடன் தூர கிழக்கு பயணம் ஒன்றை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.
ஜப்பான் மற்றும் தென் கொரியாவிற்கான வணிக குழுவிற்கு தலைமை தாங்கி செல்ல இருப்பதாக வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்..இப்பயணம் நவம்பர் மாதம் 28முதல் டிசம்பர் மாதம் 2-ந்திகதி வரை நீடிக்கும்.
இன்றய புதிய கண்டு பிடிப்பு உந்துதல் நிறைந்த பொருளாதாரத்திற்கு இத்தகைய திட்டம் போன்ற வாய்ப்புக்கள் ஒன்ராறியோ உலக பொருளாதாரத்தில் முன்னணி முனையில் இருக்க உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.ஜப்பான் மற்றும் தென் கொரியா ஒன்ராறியோவின் முக்கியமான வர்த்தக பங்காளிகளாவர்.
ஒன்ராறியோவின் இந்த குழு டோக்கியோ மற்றும் ஜப்பானில் உள்ள நகோயா, சியோல். தென் கொரியா ஆகிய இடங்களிற்கு பயணம் செய்யும்.
இரு ஆசிய அதிகார மையங்களும் ஒன்ராறியோவுடன் முக்கிய வர்த்தக பங்காளிகளாவார்கள். ரொயொட்டா, ஹொன்டா, மற்றும் சாம்சுங் போன்ற பெரும்பாலான ஜப்பானிய மற்றும் தென் கொரிய கம்பனிகள் ஒன்ராறிவில் முக்கிய முதலாளிகளாவர்.
கடந்த வருடம் ஒன்ராறியோவிற்கும் ஜப்பானிற்கும் இடையிலான இருவழி வர்த்தகம் 11-பில்லயன் டொலர்களிற்கும் அதிகமாகும் தென் கொரியாவுடன் கிட்டத்தட்ட 6-பில்லியன் டொலர்களாகும்.
கடந்த 30-வருடங்களில் தென் கொரியாவிற்கு விஜயம் செய்யும் முதலாவது ஒன்ராறியோ முதல்வர் வின் ஆவார். ஜப்பானிற்கான பயணம் 10-வருடங்களில் முதல் தடவையாகும்.
இக்குழு வாகன உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் தொடர்பான கல்வி ஆகிய துறைகளில் கவனம் செலுத்தும் என குயின்ஸ் பார்க் தெரிவித்துள்ளது.