கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு விழாவில் பேசிய நடிகை பார்வதி, ‘கசபா படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக மம்முட்டி பேசியுள்ளது குறித்து குற்றம் சாட்டினார். இதற்கு ரசிகர்கள், திரையுலகில் உள்ள மம்முட்டியின் நலம் விரும்பிகள் கண்டனம் தெரிவித்தனர்.
ஆனாலும், “அவர்கள் குழந்தைகள் தானே.. பேசிவிட்டு போகட்டும்’ என நேரடியாக எதுவும் பதில் சொல்லாமல் அமைதி காத்தார் மம்முட்டி. இந்தநிலையில் கடந்த வியாழனன்று வெளியாகிய ‘மாஸ்டர்பீஸ்’ படத்தின் மூலம் பார்வதிக்கு கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார் மம்முட்டி.
அதாவது படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள வரலட்சுமி மம்முட்டியை அடிக்கடி கெட்டவார்த்தைகளில் திட்டுவார். ஆனால் அப்போதெல்லாம் மம்முட்டி, “உங்களைப்போல என்னால் திட்ட முடியாது. ஏனென்றால் நான் பெண்களை மிகவும் மதிப்பவன்” என வசனம் பேசுவார். இந்த வசனம் படத்தில் ஐந்தாறு முறை பல காட்சிகளில் திரும்பத்திரும்ப இடம்பெறும்.
கடந்த வருடம் கேரளாவில் மாதர்சங்கம் மம்முட்டிக்கு எதிராக குரல் எழுப்பியபோதே, அதற்கு பதில் சொல்லும் விதமாக இப்படிபட்ட வசனங்களை தனது படத்தில் சேர்த்திருந்தார் இயக்குனர் அஜய் வாசுதேவ். அது இப்போது படம் ரிலீஸான நேரத்தில் பார்வதியின் விமர்சனத்துக்கு பதில் தரும் விதமாக அமைந்துவிட்டது தான் ஹைலைட்.