அம்பலன்தோட்டை – வாதுருப்பு பகுதியிலுள்ள வயல் காணியில் இருந்து குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த காணியில் உள்ள மண்ணை பெகோ இயந்திரத்தை பயன்படுத்தி தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட போதே குறித்த குண்டு கைப்பற்றப்பட்டுள்ளது.
சிறிய பிளாஸ்டிக் பெட்டியில் வைத்து புதைக்கப்பட்டிருந்த அந்தக் குண்டு தொடர்பில் அம்பலன்தோட்டை பொலிஸாா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனா்.