குதிரைப் பந்தயங்களின் மாபெரும் திருவிழாவாகக் கொண்டாடப்படும் Grand Prix d’Amérique நாளை ஞாயிற்றுக்கிழமை வன்சனில் உள்ள Hippodrome de Paris (12e) இல் நடாத்தப்பட உள்ளது. இது கிரேக்க வீரர்களின் குதிரைவண்டிப் போட்டிகளிற்குச் சமமானது என வர்ணிக்கப்பட்டுள்ளது.
இரண்டு சக்கர வண்டிகள் பூட்டிய குதிரைகளின் பந்தயமான புசயனெ Grand Prix d’Amérique பற்றி சில புள்ளி வபரங்களைப் பார்ப்போம்!!
இந்தப் போட்டியின் வெற்றியாளனிற்கு ஐந்து இலட்சம் யூரோக்கள் (500 000€) வழங்கப்படும். மொத்தமாக ஒரு மில்லியன் யூரோக்கள், முதல் ஏழு வெற்றியாளர்களிற்கும் அவர்களின் வெற்றிக்கேற்ப பகிரப்படும்.
இந்தக் குதிரைப் பந்தயமானது 36 நாடுகளில், நேரலையில் ஒளிபரப்பப்படும். நான்கு கண்டங்களில் இந்தப் போட்டி ஒளிபரப்பப்படுவது
குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டிக்காகப் பந்தயம் கட்டுபவர்களின் கட்டுப்பணமான 40 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்படும். முக்கியமாக PMU பந்தயத்தில் பெருமளவானவர்களின் பந்தயப் பணம் கட்டுவார்கள்.
அதியுச்ச வேகமாக இந்தப் பந்தயத்தில் 50,07 KM/H வேகம், 2013 ஆம் ஆண்டு Royal Dream இனால் செலுத்தப்பட்டது.
இந்த அரங்கில் குதிரைப் பந்தயத்திற்கு முன்னராகப் போர் வீரர்களின் சாகசங்களும் நடாத்தப்படும்.