‘வடசென்னை’ அப்டேட்: படமாக்கப்பட்டு வரும் 1977-ம் ஆண்டு காட்சிகள்
‘விசாரணை’ படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வடசென்னை’. இப்படத்துக்காக சென்னை மத்திய சிறைச்சாலையை அரங்கமாக அமைத்திருக்கிறார்கள். முதற்கட்டமாக பெரும் பகுதி படப்பிடிப்பு இந்த அரங்கில் தான் நடைபெற்று வருகிறது.
தனுஷ், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்கவிருக்கும் இப்படத்தை தனுஷ் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. மேலும், இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தனுஷ் அறிவித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு குறித்து படக்குழுவினரிடம் பேசிய போது, “தற்போது 1977-ம் ஆண்டுக்கான காட்சிகளை காட்சிப்படுத்தி வருகிறோம். 40 ஆண்டுகள் அடங்கிய பெரிய கதை இது. 2017-ம் ஆண்டு ஜூலையில் இப்படத்தின் முதல் பாகம் வெளியாகும். இப்படத்தில் நடித்துக் கொண்டே ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, ‘கொடி’, ‘கார்த்திக் சுப்புராஜ் படம்’ உள்ளிட்ட படங்களின் பணிகளையும் கவனிக்க திட்டமிட்டு இருக்கிறார் தனுஷ்.
தனுஷ் – வெற்றிமாறன் இருவருக்குமே கனவுப் படம் என்பதால், ரொம்ப அவசரப்படாமல் பண்ணலாம் என திட்டமிட்டு இருக்கிறார்கள்” என தெரிவித்தார்கள்.