வடக்கு ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி
ஈராக் நாட்டின் வடக்கு பகுதிகளில் உள்ள இரண்டு அணுசக்தி ஆலைகள் மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
வடக்கு ஈராக்கில் அணுசக்தி ஆலை மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி
பாக்தாத்:
ஈராக் நாட்டின் வடக்கு பகுதிகளில் உள்ள இரண்டு அணுசக்தி ஆலைகள் மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தினர். மேலும், பெட்ரோல் பங்குகள் மீதும் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் தொழிலாளர்கள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
முதல் தாக்குதல் கிர்குக் நகரின் வடமேற்கு பகுதியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எரிவாயு நிரப்பு நிலையத்தில் நடைபெற்றது. நான்கு பேர் துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளை கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் இரண்டு காவலாளிகள் படுகாயமடைந்தனர்.
பின்னர் அணுசக்தி ஆலையில் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். பின்னர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் நாள் ஒன்றிற்கு 55 ஆயிரம் பேரல்களை வடக்கு குர்தீஷுக்கு ஏற்றுமதி செய்யும் ஆயுள் நிறுவனங்களை வேலை செய்யவிடாமல் தடுக்க முயற்சித்தனர்.