வட மாகாணத்தில் புதிய 03 கைத்தொழில் மையங்களை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
யாழில் (Jaffna) இன்றைய தினம் (31.01.2025) இடம்பெரும் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த கைத்தொழில் மையங்களை காங்கேசன்துறை, பரந்தன் மற்றும் மாங்குளம் ஆகிய பகுதிகளில் நிறுவுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை புலம்பெயர் நாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு இந்த திட்டங்களில் முதலீடு செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இந்த கைத்தொழில் மையங்களை அமைப்பதன் மூலம் வடமாகணத்தில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கான வேளைவாய்ப்பையும் பெற்றுக்க முடியும் எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.