வடகொரியாவில் கால்பந்து ஆசிய கிண்ணப் போட்டி நடைபெற்றால் மலேசிய வீரர்களை கொலை செய்ய விஷம் தரப்படலாம் என மலேசிய கால்பந்து குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவில் ஜூன் எட்டாம் திகதி அந்நாட்டு கால்பந்து அணிக்கும், மலேசியாவின் கால்பந்து அணிக்கும் போட்டிகள் நடைபெறும் என கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதனிடையில் வடகொரியாவில் மலேசிய அணி சென்று விளையாடுவது குறித்து அந்நாட்டின் கால்பந்து சங்கம் நிர்வாக குழுவிடம் மேல்முறையீடு செய்துள்ளது
இந்நிலையில் இதுகுறித்து கூறியுள்ள மலேசிய கால்பந்து குழுவின் தலைவர் இஸ்மாயில் சுல்தான், மலேசிய வீரர்கள் தங்குமிடம், அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் பாதுகாப்பானதா என்பது குறித்த விடயம் தனக்கு கவலையளிப்பதாக கூறியுள்ளார்.
மேலும், தனக்கு கிடைத்த தகவலின் படி வட கொரியாவில் வீரர்களுக்கு விஷம் கலந்த உணவு தர வாய்ப்புள்ளதால், அவர்கள் சொந்த உணவை எடுத்து செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும், வட கொரியாவுக்கு எதிராக கால்பந்து போட்டியில் நடுவர்கள் தீர்ப்பு சொன்னால் அவர்கள் பாதுகாப்பும் பாதிக்கப்படும் என இஸ்மாயில் கூறியுள்ளார்.
வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங்கின் சகோதரை கடந்த மாதம் கோலாலம்பூரில் அந்நாட்டு அரசே விஷம் வைத்து கொலை செய்ததாக தென் கொரியா குற்றசாட்டியது.
இந்த கொலை சம்மந்தமாக வட கொரியாவை சேர்ந்தவர்களின் பெயரை மலேசிய அதிகாரிகள் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.