இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான சுனில் ஜோஷி வங்கதேச கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடகத்தைச் சேர்ந்த 47 வயதான சுனில் ஜோஷி இந்திய அணிக்காக 15 டெஸ்ட் மற்றும் 69 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதையொட்டி சுழற்பந்து வீச்சை வலுப்படுத்தும் வகையில் ஜோஷி ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு மட்டும் அவர் ஆலோசகராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஆசிய கண்டத்தில் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸி.
தடுமாறும். அந்த வகையில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் திட்டத்துடன் ஜோஷியை வங்கதேச கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
.