மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்ட தாழமுக்கமானது, இலங்கையின் கரையோரங்களையும், தென்னிந்தியாவையும் அதிகளவில் பாதிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால், எதிர்வரும் வாரங்களில் மழையுடன் கூடிய காலநிலையால், இடியுடன் கூடிய கனமழையும், கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும் காலநிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டு வரும் தாழமுக்கம் காரணமாக இலங்கை மற்றும் தென்னிந்திய பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்படலாம் எனவும் இலங்கையில் கரையோரப்பகுதிகள் அதிக தாக்கத்திற்கு முகங்கொடுக்க நேரிடலாம் எனவும் எதிர்வு கூறப்படுகின்றது.
எனவே நிலவும் காலநிலை குறித்து மக்கள் அவதானமாக இருக்குமாறும், வளிமண்டலவியல் திணைக்கள அறிவுறுத்தல்களை அவதானிக்குமாறும் பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.