கால்நடைத் தீவன ஊழல் வழக்கில், பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவை குற்றவாளி என்று சி.பி.ஐ நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து, அவர் ராஞ்சியில் இருக்கும் பிஸ்ரா முண்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், லாலு மீதான மற்றொரு மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சி.பி.ஐ சிறப்பு கோர்ட் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
பீகார் மாநிலத்தில், 1991-ம் ஆண்டு முதல் 1994-ம் ஆண்டு வரை லாலு பிரசாத் யாதவ் முதல்வராக இருந்த காலகட்டத்தில் கால்நடைகளுக்குத் தீவனங்கள் வாங்கியதில் ரூ.89.27 லட்சம் முறைகேடு நடந்துள்ளது என்று புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில், பீகார் மாநில முதல்வராக இருந்த லாலு பிரசாத் உள்ளிட்ட 34 பேர்மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் அரசு தரப்பு சாட்சியாக மாறி குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த வழக்கு விசாரணை, ராஞ்சி சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 15 பேரை குற்றவாளிகள் என்று அறிவித்தது நீதிமன்றம். முன்னாள் முதலமைச்சர் ஜெகந்நாத் மிஸ்ரா உள்ளிட்ட 7 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து, லாலு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவர் மீதான மற்றொரு மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சி.பி.ஐ சிறப்பு கோர்ட் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.