லாட்டரி வெற்றியுடன் மனைவியை ஆச்சரிப்படுத்திய கணவன்!
கனடா -ஒன்ராறியோவில் ரெக்யும்சே என்ற இடத்தை சேர்ந்த கெலீ பிளன்ரெ கண்ணீருடன் அதிர்ச்சியடைந்தார். காரணம் இவரது கணவர் மிசேல் தனது 100,000 டொலர்கள் லாட்டரி வெற்றி செய்தியுடன் தனது மனைவியை ஆச்சரியப்படவைத்து அக்கணத்தை கமராவில் பதிவு செய்தமையேயாகும்.
டிசம்பர் 2.லொட்டோ மக்சில் என்கோருடன் பெரிய வெற்றி பெற்றார். மனைவியை ஆச்சரியத்தில் ஆழ்த்த பூக்களையும் காட் ஒன்றையும் வாங்கி அதற்குள் வெற்றிபெற்ற சீட்டையும் வைத்து கொடுத்துள்ளார்.
மனைவி காட்டை திறந்து மகிழ்ச்சியில் அழுகை வெடிப்பதை வீடியோவில் பதிவு செய்தார்.
100,000 டொலர்களை வென்ற இத்தம்பதியர் இவர்களின் கனவு இல்லத்தை வாங்க போவதாக தெரிவித்தனர்.
ரெக்யும்சே பகுதியில் ஒரு பெற்றோ கனடா நிலையத்தில் லாட்டரி சீட்டை மிசேல் வாங்கியுள்ளார்.
ஏழு வெற்றி இலக்கங்களில் ஆறு இலக்கங்கள் இவரது சீட்டின் தேர்வில் ஒத்திருந்தது.
வெற்றி தொகையின் பெரும்பகுதி கனவு இல்லத்திற்கும் கட்டணங்கள் மற்றும் தொண்டுகளிற்கும் செல்லும் என தெரிவித்தார்.