லண்டன் விமானத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட இளைஞன்: அதிர்ச்சியளிக்கும் காரணம்
பிரித்தானியாவில் இளைஞன் ஒருவன் விமானத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர வைத்துள்ளது.
லண்டன் விமான நிலையத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. டெல்டா விமானத்தில் லண்டனிலிருந்து நியூயார்க் பயணிக்கவிருந்த Adam Saleh என்ற இளைஞனே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளார்.
விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நிகழ்வை Adam Saleh சமூக வலைதளத்தில் நேரலையாக பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, விமானத்தில் தனது தாயுடன் போனில் அரபு மொழியில் பேசியதற்காக வெளியேற்றப்படுவதாக தெரிவித்துள்ளார்.
சில பயணிகள் அவர் மற்ற மொழியில் பேசுவதாக புகார் அளித்த்தை தொர்ந்து விமான அதிகாரிகள் அவரை வெளியேற்றியுள்ளனர்.
இந்த வீடியோவை கண்ட பலர் குறித்த விமான நிறுவனத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.