லண்டன் பயங்கரவாத தாக்குதல்! வட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை! பிரித்தானியா நடவடிக்கை
இணைத்தளங்கள் மற்றும் இணைய பிரயோக மென்பொருட்கள் மீது பயங்கரவாதிகள் மேற்கொள்ளும் ஊடுவல் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் வெஸ்ட்மினிஸ்டரில் காலித் மசூத் எனும் பயங்கரவாத மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 4 பேர் உயிரிழந்திருந்தனர். அவரது கையடக்க தொலைப்பேசி சம்பவத்திற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்னர் வட்ஸ்ஆப் செயலியுடன் இணைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை ஏற்றுக் கொள்ள முடியாதென சர்வதேச செய்தி சேவைக்கு பதிலளித்த பிரித்தானிய உட்துறை செயலாளர் அம்பர் ரூட் (Amber Rudd) தெரிவித்துள்ளார்.
தொடர்பாடல் மென்பொருட்களில் பயங்கரவாதிகள் மறைவதற்கு இடமில்லை. எனினும் பயங்கரவாதிகள் இரகசிய இடமாக வட்ஸ்ஆப் பயன்படுத்துகின்றார்களா என்பதனை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வட்அப்ஸ் என்ற பிரபல இணைய தொடர்பாடல் மற்றும் உரையாடல் சேவையின் ஊடாக பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்கி தரவுகளை கொள்ளையடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் கையடக்க தொலைப்பேசிகளின் ஊடாக மக்கள் சட்டபூர்வமாக என்ன செய்கின்றார்கள் என்பதனை கண்டுபிடிக்க வேண்டும்.
இந்த நிலைமையில் புலனாய்வு சேவைகள், வட்ஸ்ஆப் குறியாக்க பயன்கள் தொடர்பில் உறுதி செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வட்ஸ்ஆப் தகவல்கள் அனைத்தும் குறியாக்க பயன்பாடுகளை கொண்டுள்ளது. அப்படி என்றால் இரகசியமாக சட்டத்தை மீறி வேறு ஒரு நபரினால் இரகசியமாக தகவல்களை படிக்க முடியாதென்பதாகும்.