பிரித்தானிய நாட்டில் தீவிரவாத தாக்குதல் நடத்தியபோது பாலத்தில் இருந்து குதித்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்து தலைநகரமான லண்டனில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் கடந்த மார்ச் 22-ம் திகதி தீவிரவாதி ஒருவன் கொடூர்மான தாக்குதலை நிகழ்த்தியுள்ளான்.
இத்தாக்குதலில் பொலிஸ் அதிகாரி உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.
தாக்குதல் நிகழ்ந்தபோது உயிர் பிழைக்க தேம்ஸ் பாலத்தில் இருந்து இளம்பெண் ஒருவர் குதித்துள்ளார்.
நேரடியாக பதிவான இக்காட்சிகளை தொடர்ந்து பெண் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காத காரணத்தினால் நேற்று அவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
Andreea Cristea(31) என்ற பெயருடைய அவர் ரோமானியா நாட்டை சேர்ந்தவர். காதலனுடன் லண்டன் நகருக்கு சுற்றுலா சென்றபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மேலும், இளம்பெண் உயிரிழந்துள்ளதால் லண்டன் தாக்குதலின் பலி எண்ணிக்கை தற்போது ஐந்தாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.