பிரித்தானியாவில் காணாமல் போன இந்தியப்பெண் மர்மமான முறையில் கொல்லப்பட்டு பிணமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில் குற்றவாளி சிக்கியுள்ளான்.
இந்தியாவை சேர்ந்த 30 வயதான பிரதீப் கவுர் என்ற பெண் லண்டனில் உள்ள ஒரு விடுதியில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பணிக்கு சென்ற பிரதீப் கவுர் வீடு திரும்பவில்லை என அவரது கணவர் பொலிசில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து ஐந்து நாட்களுக்கு பின்னர், ஹீத்ரோ விமான நிலையத்திற்கு அருகே உள்ள பகுதியில் ஒரு பையில் சிதைந்த நிலையில் பிரதீப் கவுர் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்த விசாரணை மேற்கொண்ட பொலிசார் Vadims Ruskuls என்ற நபரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், குறித்த வழக்கு விசாரணை கடந்த வாரம் லண்டனில் பழைய பெய்லி நீதிமன்றத்தில் தொடங்கியது.
விசாரணையில், சம்பவத்தன்று குற்றவாளியான Vadims Ruskuls பணிக்கு சென்ற பிரதீப் கவுர் மீது பாய்ந்து அவரை கற்பழித்து கொன்றுள்ளான்.
சம்பவத்திற்கு மறுநாள் Vadims Ruskuls முகத்திலிருந்த கீறல்களே இதற்கு சாட்சி என வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், Vadims Ruskuls கொலை குற்றத்தை மறுத்து வரும் நிலையில், சில வாரங்களில் விசாரணை முடிவுடைந்து தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது