லண்டனில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ‘இரட்டை நகர்’ உடன்படிக்கை கைச்சாத்து.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரட்டை நகர உடன்படிக்கையை இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் கிங்ஸ்டன் அப்பொன் தேம்ஸ் (Kingston upon Thames) என்ற மாநகரம் யாழ்ப்பாணத்துடன் வரலாற்றுமுக்கியத்துவம் மிக்க ஒரு இரட்டை உடன்படிக்கையில் இன்று கைச்சாத்திட்டுள்ளது.
குறித்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பொருளாதார வளர்ச்சி, வன்முறை ஒழிப்பு, அனைவருக்கும் பொதுவான சட்டவரைமுறை, நிர்வாகம், தேவை அறிந்து உரிய முடிவு எடுக்கும் பொறுப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது உரையில் குறிப்பிட்டு பேசியுள்ளார்.